Saturday, August 16, 2014

On Saturday, August 16, 2014 by Unknown in ,    


போலீஸ் துறையில் புலன் விசாரணை பணியில் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் சுதந்திர தினத்தையொட்டி தமிழக முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணிப்பதக்கங்கள் வழங்கப்படும். விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கம், ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசும் முதல்–அமைச்சர் வழங்குவார்.
கடந்த ஆண்டில் சிறப்பாக பணியாற்றியமைக்காக இந்த விருதுக்கு மதுரை திலகர்திடல் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2011–ம் ஆண்டு தெப்பக்குளம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட காமராஜர் சாலையில் இளம்பெண் துர்காதேவி, மகன் ஸ்ரீராம் ஆகியோர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டனர். அந்த சம்பவம் தொடர்பாக கீரைத்துறையில் கிரைம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராஜன்பாபு தனி கவனம் எடுத்து விசாரணை நடத்தினார். அதில் சில மாதங்கள் கழித்து காளிமுத்து, முத்துப்பாண்டி, அலெக்ஸ்பாண்டியன் ஆகிய 3 குற்றவாளிகளை கைது செய்தார். 3 ஆண்டுகளாக துப்பு துலக்க முடியாமல் இருந்த சிக்கலான வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ததால் ராஜன்பாபு, இந்தாண்டிற்கான சுதந்திர தின முதல்வர் தங்கப்பதக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.

0 comments: