Saturday, August 16, 2014

On Saturday, August 16, 2014 by Unknown in ,    
மதுரையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.

ஐகோர்ட்டு கிளை

மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடந்த சுதந்திர தின விழாவில், மூத்த நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் மூவர்ண கொடியேற்றினார். முன்னதாக அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, டி.எஸ்.சிவஞானம், கருப்பையா, பதிவாளர்கள் ஜோதிராமன், வெங்கடகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், வக்கீல் சாமிதுரை, மதுரை ஐகோர்ட்டு வக்கீல் சங்க தலைவர் பீட்டர் ரமேஷ்குமார், செயலாளர் ஏ.கே.மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கூடுதல் அரசு வக்கீல் டி.எஸ்.முகமது முகைதீன் கலந்து கொண்டு, பொழுதுகள் என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். அவரை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.

மதுரை மாவட்ட கோர்ட்டில் நடைபெற்ற விழாவில், மாவட்ட நீதிபதி சின்னராஜூ தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

காமராஜர் பல்கலைக்கழகம்


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சுதந்திரதின விழா நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசினார். சுதந்திரதின போராட்டத்தில் பெண்களின் பங்கு குறித்து பல்கலைக்கழக நடுநிலை மற்றும் பொதுப்பள்ளி மாணவ, மாணவிகள் வில்லுப்பாட்டு மூலம் விளக்கினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி, தப்பாட்டம் ஆகியன நடந்தது. பல்கலைக்கழகத்தின் சிற்றிதழை துணைவேந்தர் வெளியிட, அதன் பிரதியை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் பெரியகருப்பன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் தேர்வாணையர் விஜயன், கல்லூரி வளர்ச்சிக் குழும டீன் ராஜியக்கொடி, தொலைநிலைக்கல்வி இயக்குனர் பாலன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தபால்நிலையத்தில் விழா கொண்டாடப்பட்டது. கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் நிரஞ்சளாதேவி இனிப்பு வழங்கினார். பின்னர் தபால் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன. இதில் அலுவலர் ராஜசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குடியிருப்போர் நலசங்கம்

மதுரை ஆனையூர் ஆபீசர்ஸ் டவுன் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் நேற்று சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மாணவ- மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சு, ஓவியம், வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா மாலையில் நடந்தது.

விழாவில் மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரெத்தினம், சுப்பிரமணியன், ராஜன், அரிச்சந்திரன், செல்வம், ஸ்டாலின், பூவலிங்கம், பாலசுப்பிரமணியம், மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செல்லூர் மீனாம்பாள்புரம் குடியிருப்பு சங்கம் சார்பில் சத்தியமூர்த்தி மெயின்ரோட்டில் கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க தலைவர் அபுபக்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதூர் லூர்தன்னை ஆலயம்

மதுரை கே.புதூர் லூர்தன்னை ஆலயத்தில் சுதந்திர தின விழா நடந்தது. பங்கு தந்தை ஆரோக்கியராஜ் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்த்£ர். விழாவில் அந்திய இயக்குனர் ஜேம்ஸ் தியோபிளஸ், உதவி பங்குத்தந்தை ஒசாரியோ, அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மறை கல்வி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

மதுரை அரசரடியில் உள்ள பாண்டியன் கிராம வங்கி கிளையில் நடந்த விழாவில் வாடிக்கையாளர் சிவானுபாண்டியன் கொடியேற்றினார். மேலாளர்கள் கண்ணன், சாமுவேல், ஜோதிக்குமார், சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பாலை அரசு பள்ளி

மதுரை திருப்பாலையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாநகராட்சி கவுன்சிலர் சண்முகபிரியா ஹோஸ்மின் தலைமையில் சுதந்திர தினவிழா நடந்தது. பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்கள் சண்முகநாதன், அருண்பாரதி, மாணவி ரிஸ்வானா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விஜயலட்சுமி, பிரிட்டோ, உஷாராணி ஆகியோர் தேசிய உறுதிமொழி எடுத்தனர். போட்டிகள் நடத்தப்பட்டு மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியைகள் மஞ்சுளா, தமிழரசி, சுகுமாரி, சங்கீதா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

0 comments: