Saturday, August 09, 2014

On Saturday, August 09, 2014 by Unknown in ,
மதுரை தமுக்கம் மைதானத்தில் 1981 ம் ஆண்டு இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு  நடைபெற்ற போது அப்போதைய முதல்வர் எம் ஜி ஆர் மேற்கொண்ட முயற்சியால் தமிழன்னை சிலை வைக்கப்பட்டு இந்திய பிரதமர் இந்திராகாந்தி திறந்து வைத்தார் .இந்த சிலையின் பராமரிப்பு பணி மாநகராட்சியின் வசம் உள்ளது .அதிக வாகனங்கள் கடந்து செல்லும் பகுதி என்பதால் தமிழன்னை சிலை தூசு படிந்து காணப்பட்டது .இந்நிலையில் டியூக் அரிமா சங்க  தலைவர் மக்கள் மருத்துவர் டாக்டர் சரவணன் தலைமையில் அரிமா சங்க நிர்வாகிகள் இளங்கோவன் ,அப்துல்லா ,பாஸ்கர சேதுபதி ஆகியோர் தமிழன்னை சிலையை தூய்மைப்படுத்தி சிலையை அலங்காரம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர் .பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சரவணன் ,மதுரை டியூக் அரிமா சங்கம் சமூக நோக்குடன் கருவேல மரங்களை அழித்தல்,பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாகவும் ,அதில் ஒரு பணியாக தமிழன்னை சிலைக்கு மாலை அணிவிதததாக கூறினார்