Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
  மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சார்ந்த முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் தேவராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் .அம்மனுவில் 4000 கன அடி நீர் வரத்து இருந்தாலே பேரணை-கள்ளந்திரி மதகு பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு உள்ளது .ஆனால் 6000 கன அடி  வந்த பிறகு மேலூர் பகுதிக்கும் சேர்த்து தான் தண்ணீர் திறக்க முடியும்  என கூறுவதை ஏற்க முடியாது என்றும் ,4000 கன அடி இருக்கும் போதே பேரணி -கள்ளந்திரி மதகிற்கும் ,6000 கன அடி வந்த பிறகு மேலூருக்கும் தண்ணீர் திறக்க வேண்டும் என கூறினர் .45000 ஏக்கர் நிலங்கள் இதனை நம்பி உள்ளதாக தெரிவித்தனர்