Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
தாம்பரம், 
தாம்பரத்தில் நகை பாலீஷ் போடுவது போல நடித்து 10 பவுன் தங்க நகைகளை அபேஸ் செய்த வடநாட்டு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை பாலீஷ்
சென்னையை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரம் 4–வது தெருவைச் சேர்ந்தவர் பஷீரா (வயது 45). இவரது உறவினர் ரெஜினாபேகம் (48). 2 பேரும் கடப்பேரி எம்.இ.எஸ் சாலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு வந்த வடநாட்டு வாலிபர்கள் 2 பேர் நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினர்.
இருவரும் கொலுசுகளை கழற்றி பாலீஷ் போட கொடுத்தபோது அதை பாலீஷ் போட்டு புதிது போல மாற்றி கொடுத்தனர். உடனே அவர்கள் தங்க நகைகளுக்கும் பாலீஷ் போடுவோம் என கூறினர். இதைத் தொடர்ந்து இருவரும் 10 பவுன் தங்கச் சங்கிலிகளை பாலீஷ் போட கொடுத்தனர். நகைகளை வாங்கி பாலீஷ் போடுவது போல ஒரு சட்டியில் போட்டு நீண்ட நேரம் மஞ்சள்நிற பொடியை போட்டு கிளறினர்.
10 பவுன் நகை மோசடி
இதன் பின்னர் தங்கச்சங்கிலிகளை கண்இமைக்கும் நேரத்தில் எடுத்துக்கொண்ட அவர்கள், ‘சட்டியில் நகைகள் உள்ளன. சிறிது சூடுபடுத்தி அதன் பின்னர் குளிர்ந்தவுடன் எடுத்து விடுங்கள் நகை புதிதாக இருக்கும்’ என கூறி கூலியாக ரூ.600 வாங்கிக் கொண்டு வடநாட்டு ஆசாமிகள் கம்பி நீட்டி விட்டனர்.
அவர்கள் சென்றபின்னர் சட்டியை சூடுபடுத்தி குளிரவைத்து சட்டிக்குள் கைவிட்டு பார்த்தபோது அதில் நகைகள் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் இது தொடர்பாக தாம்பரம் போலீசில் புகார் செய்தனர். தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: