Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by farook press in ,    
குமரி மேற்கு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 17). பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார். இவர் படித்த பள்ளியின் சீனியர் மாணவர் ஒருவருடன் ராணிக்கு பழக்கம் ஏற்பட்டது.
அந்த மாணவரின் பெற்றோர் மிகவும் வசதியானவர்கள். இதனால் அந்த மாணவர் ராணிக்கு அடிக்கடி விலை உயர்ந்த பொருட்களை பரிசாக அளிப்பார். மேலும் அந்த மாணவி மேஜர் ஆனதும் அவரையே திருமணம் செய்து கொள்வேன் எனவும் உறுதி கூறினார்.
இதை நம்பிய ராணி அந்த மாணவரை தீவிரமாக காதலித்தார். மேலும் மாணவர் அழைக்கும் இடங்களுக்கும் தனிமையில் சென்றார்.
இப்படி அவர்கள் ரகசியமாக சுற்றி திரிந்ததில் ராணியும் அந்த மாணவரும் உல்லாசமாக இருந்தனர். இதில் ராணி கர்ப்பம் ஆனார். அவரது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு ராணியின் பெற்றோர் அவரிடம் விபரம் கேட்டனர்.
அப்போது ராணி மாணவர் ஒருவரை காதலிப்பதையும், அவர் மூலமே தான் கர்ப்பம் ஆனதையும் தெரிவித்தார். அதிர்ந்து போன பெற்றோர் அந்த மாணவனை சந்தித்து பேசினர். பின்னர் அவரது பெற்றோரையும் பார்த்து மாணவரால் ராணி கர்ப்பம் ஆன விபரத்தை தெரிவித்தனர்.
இந்த விபரம் ஊராருக்கு தெரிய வந்ததும் மாணவனின் உறவினர்கள் அவரை நைசாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
இதற்கிடையே ஊரில் மாணவனை காணாத ராணியின் பெற்றோர் இது பற்றி விசாரித்த போது அவர் வெளிநாடு சென்றது தெரியவந்தது.
இதனால் தாங்கள் மோசம் போனதை புரிந்து கொண்ட ராணியின் பெற்றோர் இது பற்றி குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இதனை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் இந்த வழக்கை சம்பந்தப்பட்ட கொல்லங்கோடு போலீசாரே விசாரிக்க அனுப்பி வைத்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவியை குளச்சல் பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைத்து அவருக்கு மருத்துவ பரிசோதனைக்கும் ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து மாணவியை ஆசைக்காட்டி மோசம் செய்த மாணவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்

0 comments: