Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by farook press in ,    
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறையை சேர்ந்த கணவரை இழந்த 65 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் குளிக்க சென்றார்.
அப்போது அதேபகுதியை சேர்ந்த 32 வயது வாலிபர் ஒருவர் அந்த பெண் மீது பாய்ந்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அந்த பெண் தனது மகன்களிடம் கூறி அழுதார். அவர்கள் தாயை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே வாலிபர் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 60 வயதான பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. எனவே அந்த வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, போலீசார் அந்த வாலிபரை தேடிச் சென்ற போது அவர் தலைமறைவாகி விட்டார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணிடம் இன்று காலை நித்திரவிளை போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண், போலீசாரிடம் அளித்த புகாரில் அதே பகுதியைச் சேர்ந்த சேவியர் (வயது 32) என்ற வாலிபர் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சேவியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான சேவியரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

0 comments: