Wednesday, September 10, 2014

On Wednesday, September 10, 2014 by Unknown in ,    
திருப்பூர், : திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் வாக்களிக்க இருக்கும் வாக்காளர்கள், வாக்குச்சாவடிகள் குறித்த பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 53 பதவிகளுக்கு வருகிற 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் வாக்களிக்க உள்ள ஆண், பெண் வாக்காளர்கள், வாக்குச்சாவடிகள் விவரம்.
மாநகராட்சி வார்டு உறுப்பினர் காலியிடம் 2, வாக்குச்சாவடிகள் 4, ஆண்கள் 13,491 பெண்கள் 12,092, திருநங்கையர் 2 என மொத்தம் 25,585 வாக்காளர்கள்.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் (குண்டடம்): காலியிடம் 1, வாக்குச் சாவடிகள் 81, ஆண்கள் 20,536, பெண்கள் 19,999 என மொத்தம் 40,535 வாக்காளர்கள். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்: காலியிடம் 3, வாக்குச் சாவடிகள் 28, ஆண்கள் 8,382 பெண் 8,398 என மொத்தம் 16,1080 வாக்காளர்கள். ஊராட்சித் தலைவர்: காலியிடம் 4, வாக்குச்சாவடிகள் 36, ஆண்கள் 13,3010 பெண்கள் 13,284 என மொத்தம் 26,591 வாக்காளர்கள். ஊராட்சி வார்டு உறுப்பினர்: காலியிடம் 310, வாக்குச்சாவடிகள் 33, ஆண்கள் 6,338 பெண்கள் 3,2105 என மொத்தம் 12,613 வாக்காளர்கள்.
பல்லடம் நகராட்சி வார்டு உறுப்பினர்: காலியிடம் 1, வாக்குச் சாவடி 1, ஆண்கள் 593 பெண்கள் 582 என மொத்தம் 1,1105 வாக்காளர்கள். வெள்ளக்கோவில் நகராட்சி வார்டு உறுப்பினர்: காலியிடம் 1, வாக்குச்சாவடிகள் 2, ஆண்கள் 695, பெண்கள் 660 என மொத்தம் 1,355 வாக்காளர்கள். மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர்: காலியிடம் 1, வாக்குச்சாவடிகள் 19, ஆண்கள் 8,202, பெண்கள் 8,1210, திருநங்கையர் 1, என மொத்தம் 16,330 வாக்காளர்கள். தளி பேரூராட்சி வார்டு உறுப்பினர்: காலியிடம் 3, வாக்குச்சாவடிகள் 3, ஆண்கள் 409, பெண்கள் 3510, என மொத்தம் 1066 வாக்காளர்கள். கணியூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்: காலியிடம் 1, வாக்குச் சாவடி 1, ஆண்கள் 161, பெண் 156, என மொத்தம் 3110 வாக்காளர்கள். திருமுருகன்பூண்டி பேரூராட்சித் தலைவர் காலியிடம் 1, வாக்குச் சாவடிகள் 20, ஆண்கள் 10,5105 பெண்கள் 10,368 என மொத்தம் 21,125 வாக்காளர்கள்.
மூலனூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்: காலியிடம் 1, வாக்குச் சாவடி 1, ஆண்கள் 281 பெண்கள் 284 என மொத்தம் 565 வாக்காளர்கள்.

0 comments: