Wednesday, September 10, 2014

On Wednesday, September 10, 2014 by farook press in ,    
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து நடிகை சி.ஆர்.சரஸ்வதி கிழக்கு மண்டல பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைதேர்தல் வருகின்ற 18 ம் தேதி நடைபெற உள்ளது. மேயர் பதவிக்கு அண்ணா தி.மு.க.சார்பில் கணபதி ப.ராஜ்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து கோவை மாநகராட்சி யில் உள்ள 100 வார்டுகளிலும் தமிழக அமைச்சர்கள், வாரியத்தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக பேச்சாளர்கள் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை கிழக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 57வது வார்டு, மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அணைத்து பகுதியிலும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரும், தொழிலாளர்துறை அமைச்சருமான ப.மோகன் தலைமையில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.சின்னசாமி, தலைமை கழக பேச்சாளர்  நடிகை சி.ஆர்.சரஸ்வதி, மாவட்ட பொருளாளர் சிங்கை என்.முத்து, 57வது வார்டு கவுன்சிலரும், தொகுதி செயலாளருமான மாரப்பன், வட்டார செயலாளர் ஆர்.வடிவேல்,மற்றும் அண்ணா தி.மு.க.வினர் வீதி, வீதியாக சென்று பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களிடமும்  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். பின்னர் மசக்காளிபாளையம் ரவுண்டாணா அருகில் தலைமை கழக பேச்சாளர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
இந்தியாவில் பசி, பட்டினி இல்லா மாநிலமாக விளங்குவது தமிழகம் மட்டுமே.1ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பென்சில், பேனா, காலுக்கு செருப்பு, படிக்க புத்தகம், நோட்டு, புத்தகப்பை, அட்லஸ் புத்தகம் என 14 வகையான பொருட்களை தமிழக முதல்வர் விலையில்லாமல் வழங்கி வருகிறார். 11ம், 12ம் வகுப்பு படிக்கும் போது விலையில்லா சைக்கிள் வழங்குகிறார். காலேஜ் செல்லும்போது மடிக்கணினி வழங்குகிறார்.ரூ.25 ஆயிரம் கொடுத்து பவுன் வாங்க முடியாத ஏழைகளுக்கு அவர்களின் திருமணத்திற்கு ரூ.25 ஆயிரமும், 4 கிராம் தங்கமும் இந்தியாவில் வழங்கும் முதல்வர் ஜெயலலிதா ஒருவர் மட்டுமே. மழைநீர் சேகரிப்பு மற்றும் மக்கள் நல பணிகளை  முழுமையாக நிறைவேற்றும் மாநிலம் தமிழ்நாடு அதன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒருவர் மட்டுமே என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார். 
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் மக்களுடம் மட்டுமே கூட்டணி அமைத்து தன்னந்தனியாக 39 தொகுதியில் நின்று 37 தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றுள்ளார். இப்போதே தமிழகத்தில் உள்ள 217 தொகுதியில் அண்ணா தி.மு.க.வெற்றி பெற்று விட்டது.வருகின்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க.வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் கோவை மாநகராட்சிக்கு முதல்வர் ரூ.200 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.இந்த பகுதிக்கும் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதா ஆதரவு பெற்ற வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு அதிக வாக்குகள் அளித்து அவரை வெற்றி பெறச் செய்திட வேண்டும்.இவ்வாறு சி.ஆர்.சரஸ்வதி பேசினார்.
பிரச்சார கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சிங்கை அம்புஜம், மகளிர் அணி பகுதி இணை செயலாளர் குமுதவல்லி, பேரவை செயலாளர் ராஜேந்திரன், வட்டார அவைத்தலைவர் பன்னீர் செல்வம், பெரியார் ராமசாமி, பார்த்திபன்,சௌந்தரராஜன்,தாஸ், எம்.கே.பி.செல்வராஜ்,சேகர், பழனிசாமி, திண்டிவனம் எம்.எல்.ஏ.ஹரிதாஸ், விழுப்புரம் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பி.தங்கபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் செல்லமுத்து, வார்டு பொறுப்பாளர்கள் ரஜினி குணசேகரன்,முருகானந்தம், குமரேசன், பால்ராஜ், திருநாவுகரசு, ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் பாக்கியலட்சுமி, கௌரி ஆகியோர் உள்பட் பலர் கலந்து கொண்டனர்.

0 comments: