Wednesday, September 10, 2014

On Wednesday, September 10, 2014 by Unknown in ,    




 
திருப்பூர்,: பின்னலாடைகளுக்கு சாயமேற்ற பயன்படும் சோடா ஆஷ் என்ற ரசாயன பொருட்களின் விலையேற்றத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று டீமா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
பின்னலாடைகளுக்கு சாயமேற்ற பயன்படும் சோடா ஆஷ் என்ற ரசாயனத்தின் விலை கடந்த ஆண்டுகளில் கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.550ஆக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் காரணமாக பின்னலாடைகளை வெளிநாடுகளுக்கு குறித்த நேரத்தில் தயாரித்து அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதிக்கான துணிகளை குறித்த நேரத்தில் அனுப்பி வைக்காவிட்டால் வர்த்தகத்தை இழக்க நேரிடும். சாய உற்பத்தி செய்யும் மொத்த உற்பத்தியாளர்கள் தங்களுக்குள் கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டு வேண்டுமென்றே இந்த விலை ஏற்றத்தை செய்து வருகின்றனர்.
இதனால், ஈரோடு, சேலம், கரூர் உட்பட பல்வேறு ஊர்களில் நடந்து வரும் ஜவுளி தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல் அமைச்சரின் சீரிய முயற்சி காரணமாக நூல் விலை கட்டுப்பாட்டில் உள்ளது. அதேபோல் இந்த சோடாஆஷ் விலையேற்றத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சீரான முறையில் அனைவருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 comments: