Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் மொத்தம் 1,226 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. கோவை ஆவாரம்பாளையம் வாக்குச்சாவடி எண் 369–ல் ஓட்டுப்பதிவு தொடங்கும்போது மின்னணு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதேபோல் குளத்துப்பாளையம் வாக்குச்சாவடி எண் 998–லும் மின்னணு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் விரைந்து சென்று எந்திரத்தில் ஏற்பட்ட சிறிய கோளாறை சரி செய்தனர். இதைத்தொடர்ந்து 2 வாக்குச்சாவடிகளிலும் 15 நிமிடம் தாமதமாக ஓட்டுப்பதிவு தொடங்கியது. அதன்பின்னர் ஓட்டுப்பதிவு எந்தவித இடையூறும் இன்றி நடைபெற்றது.
கோவை மேயர் தேர்தலுக்கு மொத்தம் 1,226 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. ஓட்டுப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மாற்றிவிட்டு புதிய ஓட்டுப்பதிவு எந்திரங்களை பொருத்த தயார்நிலையில் 154 எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஏற்கனவே பொருத்தப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடைபெற்று முடிந்ததாக மாநகராட்சி பிரிவு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments: