Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
பூந்தமல்லி,
திருவேற்காடு, சிவன் கோவில் சாலையில் 63 சென்ட் நிலத்தின் ஒரு பகுதியில் பனையாத்தம்மன் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலை தனிநபர் ஒருவர் பராமரித்து வருகிறார். இந்த இடத்தை வேறு ஒரு தனி நபர் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நிலத்தை அளப்பதற்காக நேற்று சர்வேயருடன் 100–க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அங்கு வந்தனர். ஆனால் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது. அதனை அளக்கக்கூடாது என்று அப்பகுதி பொது மக்களும், கோவில் நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைதொடர்ந்து நிலத்தை அளக்காமல் சர்வேயர் அங்கிருந்து சென்று விட்டார்.
இதை கண்டித்து 100–க்கும் மேற்பட்ட வக்கீல்கள் திடீரென திருவேற்காடு பஸ்நிலையம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரசம் பேசியதையடுத்து மறியலை கைவிட்டு வக்கீல்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 comments: