Wednesday, September 10, 2014

On Wednesday, September 10, 2014 by farook press in ,    
காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்தவர். இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இரண்டு இந்தி படங்களிலும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். சம்பளமும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘நண்பேன்டா’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தனர். இதற்காக காஜல் அகர்வாலுக்கு 40 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத காரணங்களால் காஜல் அகர்வால் இப்படத்தில் நடிக்கவில்லை. அவருக்கு பதில் நயன்தாராவை ஒப்பந்தம் செய்தனர். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.
நண்பேன்டா படத்தில் காஜல் அகர்வால் நடிக்காததால் அட்வான்ஸாக கொடுத்த ரூ.40 லட்சத்தை உதயநிதி திருப்பி கேட்டார். ஆனால் அதை கொடுக்க காஜல் அகர்வால் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. உங்களுடன் அடுத்த படத்தில் நடிக்கும் போது அட்வான்ஸ் தொகையை கழித்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டாராம். பல தடவை வற்புறுத்தி கேட்டும் பணத்தை அவர் கொடுக்க வில்லை.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் காஜல் அகர்வால் மீது உதயநிதி புகார் அளித்துள்ளார். அட்வான்ஸ் தொகை ரூ.40 லட்சத்தை வாங்கி தரும்படி புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். தயாரிப்பாளர் சங்கம் விரைவில் இது குறித்து விசாரணை நடத்த உள்ளது.

0 comments: