Friday, September 12, 2014

On Friday, September 12, 2014 by Unknown in ,    
நியூ யார்க்: விமானத்தில் பயணித்த பக்கத்து இருக்கையில் இருந்த பெண்ணின் முகத்தில் முத்தமிட்ட 62 வயது இந்தியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 62 வயது தேவேந்தர் சிங் என்பவர் ஹூஸ்டனிலிருந்து நியூயார்க்குக்கு விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது அவரது பக்கத்து இருக்கையில் அமெரிக்கப் பெண் ஒருவர் பயணித்தார். விமானம் பறந்து கொண்டிருந்தபோது அருகே இருந்த பெண், சிங் பக்கமாக முகத்தைத் திருப்பியடி தூங்கியுள்ளார்.

இதைப் பார்த்த சிங், தானும் தூக்க கலக்கத்தில் சாய்வது போல அவரது முகத்துக்கு அருகே போய் சாய்ந்து கொண்டு முகத்தில் முத்தமிட்டுள்ளார் மேலும் அந்த பெண்ணின் சட்டைக்குள் கைகள் விட்டதாக புகாரில் தெரிகிறது. கோபமடைந்த அப்பெண் கத்திக் கூச்சலிட்டார். இதையடுத்து விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நியூயார்க்கை விமானம் வந்தடைந்ததும் விமான ஊழியர்கள் சிங்கை போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் சிங்கைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்

0 comments: