Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by Unknown in ,    

இளமை பருவத்தை நான் அனுபவித்தில்லை. அப்போதும் இசையில்தான் நேரத்தை செலவிட்டேன் என்றார் ஏ.ஆர்.ரகுமான்.இதுபற்றி அவர் கூறியதாவது:  கடினமாக வேலை வாங்கும் படங்களுக்கு மட்டுமே இப்போதெல்லாம் இசை அமைக்கிறேன். இல்லாவிட்டால் எனது ரசிகர்களை நான் இழக்க வேண்டியது இருக்கும். சரித்திர கால படங்களுக்கு இசை அமைத்து முடித்தபிறகு இப்போது இளைஞர்களை கவரும் படங்களுக்கு இசை அமைக்கிறேன். புராண, சரித்திர கால படங்களுக்கு இசை அமைத்ததால் நான் சோர்வு அடையவில்லை. தொடர்ந்து அத்தகைய படங்களில் பணியாற்ற விரும்புகிறேன். சரித்திர கால படங்களுக்கு இசை அமைக்கும்போது புதிய கலாச்சாரத்தை என்னால் கண்டு உணரமுடிகிறது. 
ஒரு சில படங்களுக்கு நான் அமைத்த இசை பின்னணி இசையாக மட்டுமே அமைந்துவிடுகிறது. அதில் பாடகர்கள் இடம்பெறுவதில்லை. எனவே இத்தகைய இசை 30 முதல் 40 சதவீத அளவிலேயே ரசிகர்களை சென்றடைகிறது. புதுமை யான கதைகளுக்கு நான் இசை அமைக்க ஒப்புக்கொள்வதற்கு காரணம் அப்பாடல்கள் திரையில் நட்சத்திரங்கள் பாடுவதுபோல் இடம்பெறும் என்பதுதான். என் சிறுவயதில் 40 வயதுக்கும் அதிகமான இசை அமைப்பாளர்களுடன் நான் நேரத்தை செலவிட்டேன். இளமை பிராயத்தை நான் அனுபவிக்காவிட்டாலும் அப்போதைக்கு இருந்ததைவிட இப்போது இன்னும் இளமையாக இருப்பதாக உணர்கிறேன்.இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.

0 comments: