Friday, September 12, 2014
நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் செப்டப்பர் 26 ஆம் தேதி நியூயார்க்குக்குச் செல்ல உள்ளார். 27 ஆம் தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அமெரிக்க தொழிலதிபர்களையும் சந்தித்து, இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.
28 ஆம் தேதி அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் நியூயார்க்கில் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்குள்ள மேடிசன் சதுக்க கார்டனில் நடைபெற உள்ள விழாவில், 20 ஆயிரம் இந்தியர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை அமெரிக்காவில் 20 நகரங்களில் இந்தியர்கள் மத்தியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ‘மிஸ் அமெரிக்கா’ அழகி நினா தவுலுரி கலந்து கொள்கிறார். இவர் ‘மிஸ் அமெரிக்கா’ அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்க வாழ் இந்தியப்பெண் என்ற சிறப்புக்கு உரியவர்.
மேலும், பிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹரி சீனிவாசன், நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார்.
இது குறித்து இந்திய அமெரிக்க சமூக அறக்கட்டளை செய்தித் தொடர்பாளர் ஆனந்த் ஷா கூறியதாவது:-
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான நரேந்திர மோடியின் பேச்சை கேட்பதற்கு, உலகத்தின் பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவின் குடிமக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
எங்கள் அமைப்புக்கு அமெரிக்காவில் உள்ள 400க்கும் மேற்பட்ட இந்திய அமைப்புகளின் ஆதரவு உள்ளது. பிரதமர் மோடிக்கு அளிக்கப்படவுள்ள பிரமாண்ட வரவேற்பில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மிகுந்த ஊக்கம் கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே வலுவான நட்பினை ஏற்படுத்துவதற்கு தங்கள் ஆதரவினை தெரிவிக்கும் வகையில், பல்லாயிரக்கணக்கான தனி நபர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தாராளமாக நன்கொடை வழங்கி உள்ளனர்.
விழாவில் கலந்து கொள்வதற்கு, அரங்கில் உள்ள இருக்கைகளுக்கு அதிகமாகவே விண்ணப்பங்கள் வந்துள்ளன. அரங்கத்தினுள் அனுமதிக்கப்படுகிற விருந்தினர்கள் லாட்டரி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 

0 comments:
Post a Comment