Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
சென்னை, செப். 13–
பயணிகள் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னை சென்ட்ரல் வழியாக மதுரை – ஜெய்ப்பூர் இடையே அதிவிரைவு வாராந்திர பிரீமியம் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
செப்டம்பர் 20, 27, அக்டோபர் 4, 11, 18, 25, நவம்பர் 1, 8, 15 ஆகிய சனிக்கிழமைகளில் இந்த சிறப்பு ரெயில் மதியம் 1.15 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 11.25 மணிக்கு மதுரை சென்றடையும்.
செப்டம்பர் 23, 30, அக்டோபர் 7, 14, 21, 28 மற்றும் நவம்பர் 4, 11, 18 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஜெய்ப்பூர் சென்றடையும். செப்டம்பர் 23–ந்தேதிக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
மற்ற பிரீமியம் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு ரெயில் புறப்படும் நாளுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக தொடங்கப்படும்.
இந்த சிறப்பு ரெயில்கள் போபால், நாக்பூர், விஜயவாடா, கூடூர், சென்னை சென்ட்ரல், ஜோலார்பேட்டை மற்றும் திருச்சி நிலையங்களில் நின்று செல்லும்.

0 comments: