Saturday, September 06, 2014

On Saturday, September 06, 2014 by Unknown in , ,    

தற்போதுள்ள பனி நிறைந்த அண்டார்டிகா பகுதியில் 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் இப்பகுதியில் ஏற்கெனவே ஒரு “உலகம்’ இருந்துள்ளதை விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்பின் மூலம் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.

அண்டார்டிகாவின் தொலைதூர மலைப்பகுதிகளில் தாவரங்கள், விலங்கினங்கள் ஆகியவற்றின் கல்லினுள் பதிந்த படிமங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள வடக்கு டகோடா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆடம் லெவிஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இந்த அரிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக, “தி டெய்லி டெலிகிராப்’ செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகா பகுதியில் நிலவிய கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீதோஷ்ண நிலை காரணமாக உயிரினங்கள் அப்படியே பனியில் மடிந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சி, எரிமலை சாம்பல்கள் மூலம் கிடைத்த ஆய்வுகள் மூலம் அங்கு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் பெரிய பெரிய பனிப்பாறைகள் இருந்ததும் தெரியவந்துள்ளது. அப்பகுதியில் கிடைத்த கடின ஓடுள்ள நீர்வாழ் பிராணியின் படிமங்கள், பாசி வகைகள் ஆகியவற்றின் மூலம் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசு காரணமாக உலகளாவிய விழிப்புணர்வு தற்போது ஏற்பட்டிருந்தாலும், “பழைய’ உலகம் ஒன்று இருந்து அழிந்துபோனதை கருத்தில் கொள்ள இந்த கண்டுபிடிப்பு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

0 comments: