Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by farook press in ,    
கத்தி படத்தில் இரண்டு விஜய் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அதில் கதிரேசன் என்ற நல்லவன், ஜீவானந்தம் என்ற கெட்டவன் என இரண்டு கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. இதில், வில்லன் ஜீவானந்தம் பள்ளிக்குழந்தைகளையும், கதிரேசன் காதலியான சமந்தாவையும் பிணையக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்டு, கதிரேசன் விஜய்யை தன்னுடைய தேவைக்கு தவறாக பயன்படுத்த முயற்சிக்கின்றான். அப்பொழுது, ஜீவானந்தம் அசந்த நேரம் பார்த்து சமந்தா அவனை கத்தியால் குத்தி விட்டு, கதிரேசனிடம் தாங்கள் இருக்கும் இடத்தை தெரிவிக்கின்றார்.
சமந்தா, விஜய்யை கத்தியால் குத்தும் காட்சி தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதால், ஒரு புத்தம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த காட்சிகளை படம் பிடித்துள்ளாராம் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த விஷயம் தற்பொழுது படயூனிட்டில் வேலைபார்த்தவர்கள் மூலம் வெளியில் கசிந்துள்ளது. மேலும், விஜய் ரசிகர்களுக்கு துப்பாக்கி படத்தை விட பலமடங்கு ‘விஷுவல் ட்ரீட்’ கொடுபதற்காக, ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளாராம்.
இப்படி பலரது உழைப்பிலும் உருவாக்கப்பட்டு வரும் கத்தி படத்தை, தமிழன துரோகி சுபாஸ்கரன் தயாரிப்பது தான் அனைவர் மனதிலும் கொஞ்சம் வருத்தத்தை உண்டாக்கியுள்ளது.

0 comments: