Friday, September 05, 2014
மதுரை மாவட்டத்தில் செயல்படும் அனுராதா கிரானைட் நிறுவனம் உட்பட 50-க்கும் மேற்பட்ட கிரானைட் நிறுவனங்கள்,
ஐகோர்ட்டு மதுரை கிளையில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தன. அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்ட கலெக்டர், கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் பல்வேறு தேதிகளில் எங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசுகளை அனுப்பினார். அதில், மேலூர் பகுதிகளில் குத்தகை உரிமம் வழங்கப்படாத பகுதிகளில் இருந்து கிரானைட் எடுக்கப்பட்டுள்ளது. அந்த கிரானைட் கற்கள் அனுமதி பெறாமல் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் நியமித்த ஆய்வுக்குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அறிக்கை செய்யப்பட்டுள்ளது.
அதில், அனுமதிப் பெறாமல் கிரானைட் எடுத்ததாலும், அதை வேறு இடத்துக்கு வாகனங்களில் அனுமதிப்பெறாமல் எடுத்துச் சென்றதாலும், அரசுக்கு பெரும் தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த அறிக்கையை ஏன் ஏற்கக்கூடாது? உங்கள் நிறுவனம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்ற கேள்விகளுக்கு கலெக்டர் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.
கலெக்டர் நியமித்த ஆய்வுக்குழு, தன்னுடைய ஆய்வுப்பணியை எங்களது கிரானைட் குவாரிகள் அமைந்துள்ள இடத்தில் மேற்கொள்வதற்கு முன்பு எங்களுக்கு தகவல் தெரிவித்து நோட்டீசு தரவில்லை. மேலும், அந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், அரசு ஏற்கனவே ஒரு முடிவினை எடுத்துவிட்டு, எங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த விளக்க நோட்டீசை ரத்து செய்யவேண்டும். அந்த விளக்க நோட்டீசின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க மதுரை கலெக்டருக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதி விசாரித்து, மனுதாரர்கள் நிறுவனங்களுக்கு அனுப்பிய விளக்க நோட்டீசுகளின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க மதுரை கலெக்டருக்கு கடந்த 2013-ம் ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு பிளீடர், ‘மேலூர் பகுதிகளில் சட்டவிரோதமாக கிரானைட் குவாரிகள் செயல்படுகிறது என்று அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதனடிப்படையில், கலெக்டர் நியமித்த ஆய்வுக்குழு ஆய்வுகளை மேற்கொண்டதில், இந்த சட்டவிரோத குவாரிகளினால் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. எனவே, அந்த அறிக்கையை இணைத்து, தனியார் கிரானைட் நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு கலெக்டர் நோட்டீசு அனுப்பியுள்ளார். மேலும், ஆய்வுக்குழு வருகிறது என்று கிரானைட் நிறுவனங்களுக்கு முன்கூட்டியே நோட்டீசு அனுப்பி தகவல் தெரிவிக்கவில்லை என்று மனுதாரர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அவ்வாறு முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு, ஆய்வு மேற்கொண்டால், அந்த ஆய்வின் நோக்கமே சிதைந்து விடும்‘ என்று வாதிட்டார். மனுதாரர்கள் தரப்பிலும் வக்கீல்கள் வாதம் செய்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அரிபரந்தாமன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி அரிபரந்தாமன் வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-
தங்களது குவாரியை கலெக்டர் நியமித்த ஆய்வுக்குழு ஆய்வு செய்வதற்கு முன்பு எங்களுக்கு தகவல் தெரிவித்து நோட்டீசு தரவில்லை என்று மனுதாரர்கள் தரப்பில் கூறுவது எந்த விதத்திலும் அர்த்தமில்லாதது. மனுதாரர்களின் இந்த வாதத்தை ஏற்க முடியாது. மேலும் கலெக்டர் அனுப்பியுள்ள விளக்க நோட்டீசில், ஆய்வுக்குழுவின் அறிக்கை இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அரசு ஏற்கனவே ஒரு முடிவினை எடுத்து விட்டு, தற்போது விளக்க நோட்டீசை தங்களுக்கு வழங்கியுள்ளது என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையை இணைக்காமல், வெறும் நோட்டீசை மட்டும் கலெக்டர் அனுப்பியிருந்தால், அந்த நோட்டீசில் விளக்கம் எதுவும் இல்லை என்று மனுதாரர்கள் கூறி வழக்கு தொடர்வார்கள் என்று கூடுதல் அரசு பிளீடர் செய்த வாதம் சரியானது ஆகும்.
தற்போது கலெக்டர் அனுப்பியுள்ள நோட்டீசில், ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்றுதான் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு கலெக்டரிடம் முறையிட மனுதாரர்களுக்கு வாய்ப்பு இருந்தும், அதை செய்யாமல், இந்த ஐகோர்ட்டை நாடியுள்ளனர். எனவே, இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
அதேபோல, பி.ஆர்.பி. கிரானைட் உட்பட 10-க்கும் மேற்பட்ட கிரானைட் நிறுவனங்கள் தனித்தனியாக மற்றொரு வழக்குகளை ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்தது. அந்த மனுக்களில், அவர்கள் கூறியிருப்பதாவது:- மேலூரில் பட்டா நிலத்தில் 20 முதல் 30 ஆண்டுகள் வரை குத்தகை அடிப்படையில் கிரானைட் எடுக்கும் தொழில் செய்து வருகிறோம்.
இந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் தொழில்துறை செயலாளர் எங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளார். அதில், தங்களுக்கு வழங்கப்பட்ட குத்தகை உரிமம் காலாவதியாகி விட்டது என்று ஏன் உத்தரவிடக் கூடாது? என்று விளக்கம் கேட்டு கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு விளக்க நோட்டீசு அனுப்ப தொழில்துறை செயலாளருக்கு அதிகாரம் கிடையாது. இந்த குத்தகை உரிமம் தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் கலெக்டருக்குத்தான் உள்ளது.
மேலும், ஆய்வுக்குழு சமர்பித்த அறிக்கையின் அடிப்படையில், எங்களுக்கு தொழில்துறை செயலாளர் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியிருந்தாலும், அந்த ஆய்வுகுழுவின் அறிக்கை நகலை எங்களுக்கு வழங்கவில்லை. எனவே, இந்த விளக்க நோட்டீசை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வைத்து விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன், சென்னை ஐகோர்ட்டில் வைத்து பிறப்பித்துள்ள உத்தரவில், ‘குத்தகை உரிமம் காலாவதி ஆகிவிட்டதாக முடிவு எடுக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. மேலும், தொழில்துறை செயலாளர், விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப அதிகாரம் இல்லை என்று மனுதாரர்கள் தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை. எனவே, இந்த மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
The 10 th mid-year Chemical Research Society of India (CRSI) Symposium in Chemistry was jointly organized by National Ins...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருப்பூர் காங்கயம் ரோடு செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நிர்வாகவியல் துறை சார்பில் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சவுரி...
-
Sir / Madam, The Kargil Vijay Diwas was celebrated on 26.07.2014 at 9.00 a.m. at the Kargil War Memorial on the Beach Roa...
-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 18- ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும்27ஆயி...
-
திருப்பூர் அருகே உள்ள வஞ்சிபாளையத்தில் இருந்து காலேஜ் ரோடு வழியாக ஆட்டோ ஒன்று அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது எதிரே ரோட்டோரம் விய...
-
திருச்சி 17.9.15 சபரிநாதன் 9443086297 திருச்சியில் உள்ள மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலில் பிரம்மான்டமாண கொள்கட்டை...
0 comments:
Post a Comment