Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by Unknown in ,    










திருப்பூர் அவினாசி சாலை குமார்நகர் பஸ் நிறுத்தம்  இன்றுமுதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .  திருப்பூரில்  ஏற்கனவே வாகனங்கள் அதிகம் இருந்து வருவதால்  சாலையில் அடிக்கடி விபத்துக்கள் அதிகமாகி வருகிறது . அதுவும் குறிப்பாக அவினாசி சாலையில் புதிய பேருந்துநிலையம்    கோவை சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம்  ஈரோடு  சேலம்  கோபி ஆகிய அணைத்து ஊர்களுக்கும்  இந்த வழியாகத்தான்  செல்கிறது.  குமார்நகர் பகுதியில் சிக்னல் பக்கத்திலே  பஸ் நிறுத்தம் இருப்பதால்  பேருந்துகள்  வரிசையாக  நிற்பதால்  பின்னே வரும் வாகனங்கள் நின்று  போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது .  இதனால்  புஸ்பா  தியேட்டர்லிருந்து   இருந்து வரும் பேருந்துகள் குமார்நகர்  டான்சி திட்ட அலுவலகம் இடத்திலும்  அவிநாசியிலிருந்து  வரும் பேருந்துகள் காதி அலுவலகம்  முன்பு  பஸ் நிறுத்தம்  மாற்றம்  செய்யப்பட்டுள்ளது .  பொதுமக்கள் நலன் கருதி  மாவட்ட  கமிஷனர்  சேஷசாய்  துணை கமிஷனர்  திருநாவுக்கரசு மற்றும் போக்குவரத்துக் காவல்  துணை  கமிஷனர்  மகுடபதி   போக்குவரத்துக் காவல் ஆய்வாளர்  அ .சுகுமாரன்  தெரிவித்தனர் .

0 comments: