Thursday, September 11, 2014
சென்னையில் வெளிவரும் சில ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களின்
செய்தியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பாக சில மூத்த காவல்துறை அதிகாரிகளை
சென்னை நகர காவல்துறை நியமித்திருப்பதாகக் கூறும் சுற்றறிக்கை ஊடகங்களில்
வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சுற்றறிக்கையில் நான்கு ஆங்கில நாளிதழ்கள், ஏழு தமிழ் நாளிதழ்களின் 26 செய்தியாளர்களுக்கும் பொறுப்பாக துணை ஆணையர், உதவி ஆணையர் மட்டத்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றறிக்கையின் பிரதி நேற்று பகிரங்கப்படுத்தப்பட்ட நிலையில், இது தொடர்பாக சென்னையிலிருக்கும் பத்திரிகையாளர் சங்கங்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளன.
இந்தச் சுற்றறிக்கையை பகிரங்கப்படுத்திய சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரான அன்பழகன், இது தொடர்பாக இந்திய பிரஸ் கவுன்சிலிடம் புகார் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.
சென்னை பிரஸ் கிளப்பும் இதைக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய பாரதி தமிழன், இது பத்திரிகையாளர்களை மிரட்டும் செயல்; இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.
அதிகாரிகள் கவனித்துக்கொள்ள வேண்டிய பத்திரிகையாளர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் செய்தியாளரான முத்தலீஃப், குற்றங்களைக் குறைக்க வேண்டிய காவல்துறை, குற்றங்களை மறைப்பதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகவும் இதனால், காவல்துறையினருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையிலான மோதல் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் கண்டனம்
காங்கிரஸ், பாரதீய ஜனதாக் கட்சி, தி.மு.க. போன்ற கட்சிகள் இது தொடர்பாக கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய தி.மு.கவின் அமைப்புச் செயலர் டி.கே.எஸ். இளங்கோவன், பத்திரிகையாளர்களைக் கண்காணிப்பதற்கான சென்னைக் காவல்துறையின் இத்தகைய முயற்சி, அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், சென்னை நகரக் காவல்துறை இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், காவல்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி ஓய்வுபெற்றதையடுத்து, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் சில ஊடகங்களில் வெளியானதைப் போல எவ்வித சுற்றறிக்கையும் பிறப்பிக்கவில்லை என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
அரசு மேல்நிலைப் பள்ளி கண்ணுடையான் பட்டியில் பயிலும் மாணவர்களுக்கு 1 லட்சம் ௹பாய மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அப்பள்ளி...
-
திருப்பூர் காங்கயம் ரோடு செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நிர்வாகவியல் துறை சார்பில் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சவுரி...
-
Sir / Madam, The Kargil Vijay Diwas was celebrated on 26.07.2014 at 9.00 a.m. at the Kargil War Memorial on the Beach Roa...
-
சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தல வரலாறு கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமா...
-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 18- ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும்27ஆயி...
-
உடுமலைப்பேட்டை ராமசாமி நகரில் அமைந்திருக்கும் கிருஸ்துவ ஜப வீடு புதிய கட்டிட திறப்பு விழா .மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் மீண்டும் ஆட்சிப...
0 comments:
Post a Comment