Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by Unknown in ,    



திருப்பூரில் அவிநாசி ரோடு, மங்கலம் ரோடு, பி.என்., ரோடு, ஊத்துக்குளி ரோடு, காலேஜ் ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகளில், "டிவைடர்' இல்லாத பகுதிகளில், ரோட்டை இரண்டாக பிரிக்கும் வெள்ளைக்கோடுகள் வரையப்பட்டுள்ளன. இதில், ஒரு வழியாக வாகனங்கள் செல்ல வேண்டும்; மறுபுறம், வாகனங்கள் எதிரில் வரவேண்டும். பிரதான ரோடுகளில், சில இடங்களில் வெள்ளைக்கோடு தேய்ந்து, அழிந்துள்ளது; சில இடங்களில், ரோட்டுக்கு நடுவே வெள்ளைக்கோடு வரைந்த அறிகுறியே காணப்படவில்லை. ரோட்டை பிரிக்காத இப்பகுதிகளில் செல்லும் வாகனங்கள், முறையான போக்குவரத்தை பின்பற்றுவதில்லை. முன்னால் செல்லும் வாகனங்களை முந்திச் செல்லும் நோக்கத்துடன், ரோட்டின் மறுபுறம் வரை வேகமாக செல்கின்றன. வரிசையாக செல்லும் கனரக வாகனங்களுக்கு இடையே கார்களும், டூவீலர்களும் புகுந்து செல்வது, வழக்கமாக உள்ளது.

மழைக்காலங்களில், வெள்ளைக்கோடு இல்லாத பகுதிகளில், ரோட்டின் அகலத்தை வாகன ஓட்டிகள் கணிக்க முடிவதில்லை. இதனால், எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறாக குறுக்கில் செல்வதால், விபத்து எளிதில் நடக்கிறது. ஊராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலை என அந்தந்த துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரதான ரோடுகளில், வெள்ளைக்கோடு வரைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"ரோட்டுக்கு நடுவே ஒருமுறை வெள்ளைக்கோடு வரைந்தால், மூன்று ஆண்டுகள் வரை அழியாது. சில இடங்களில், ரோடு மற்றும் பாலம் பணிக்காக செப்பனிடும்போது கோடுகள் அழிந்திருக்கலாம். இதற்காக, டெண்டர் விடப்பட்டு, வெள்ளைக் கோடு வரையும் பணி மேற்கொள்ளப்படும்,' என்றார்.




0 comments: