Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by Unknown in ,    




தெற்கு ரெயில்வே கால அட்டவணை கடந்த 28–ந் தேதி வெளியிடப்பட்டது. புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பிரீமியம் ரெயில்கள், பாசஞ்சர் ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஒரு சில ரெயில்கள் புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. 31 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டதால் பயண நேரம் குறைகிறது. புதிய கால அட்டவணை இன்று (1–ந் தேதி) முதல் நடைமுறைக்கு வந்தது.

கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12676) நேரம் மாற்றப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இந்த ரெயில் இரவு 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.
இன்று முதல் கோவை எக்ஸ்பிரஸ் பிற்பகல் 2.55 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு இரவு 10.25 மணிக்கு சென்ட்ரல் வந்து சேரும்.
சென்ட்ரலில் இரவு 8.25 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் இன்று இரவு முதல் 8.15 மணிக்கு புறப்படும். 10 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.
சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு இரவு 9.30 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் இன்று இரவு முதல் 9 மணிக்கு புறப்பட்டு செல்லும். 30 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.
இதே போல சென்ட்ரலில் இருந்து பழனிக்கு இரவு 9 மணிக்கு புறப்படக்கூடிய எக்ஸ்பிரஸ் இன்று இரவு முதல் 9.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதன் புறப்பாடு நேரம் 30 நிமிடங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் இன்று முதல் மாலை 6 மணிக்கு புறப்படும்.
எழும்பூரில் இருந்து (12651) செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இதுவரை இரவு 8.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டது. இன்று முதல் 5 நிமிடங்கள் தாமதமாக இரவு 8.55 மணிக்கு புறப்படும்.
திருச்செந்தூரில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் இன்று முதல் மாலை 6.50 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் மறுநாள் காலை 11.25 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.

0 comments: