Monday, September 01, 2014
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் பெருந்திரள் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய, மாநில அரசுகளின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஏழை மக்களுக்கான மானியம் வெட்டு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாராள சலுகைகள் வழங்குவது ஆகியவற்றை எதிர்த்தும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், லஞ்ச ஊழல் சீர்கேட்டை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி இரு கட்சிகளின் சார்பில் செப்டம்பர் 24ம் தேதி முதல் 31ம் தேதி முடிய மாநில அளவிலான மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டது.
அந்த கோரிக்கைகளுடன், திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும், அடுக்குமாடி குடியிருப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருப்பூர் மாவட்டத்தில் நகரங்கள், கிராமங்களில் ஆயிரக்கணக்கான குழுக்களாக இரு கட்சி ஊழியர்கள் வீடு, வீடாக வீதிகள்தோறும் மக்களைச் சந்தித்தனர்.
இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 1ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து, ஆட்சியாளர்களுக்கு எதிராக பெருந்திரள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இரு கட்சிகள் அறைகூவல் விடுத்திருந்தன.
இதன்படி திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் எதிரில் திங்களன்று பெருந்திரள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.காளியப்பன் இந்த போராட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர். உண்ணாவிரத பந்தல், இருக்கைகள் நிரம்பிய நிலையில் முகப்புப் பகுதியில் கூடுதலாக சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அவையும் நிரம்பி வழிந்தது. இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோபால், என்.கோபாலகிருஷ்ணன், சி.சுப்பிரமணியம், கே.ரங்கராஜ், வாலிபர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.முத்துக்கண்ணன், மாதர் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.மைதிலி, கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.குமார் ஆகியோரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் எம்.சி., பூண்டி செயலாளர் செல்வராஜ், அவிநாசி ஒன்றியச் செயலாளர கே.எம்.இசாக், தெற்கு வட்டாரத் துணைச்செயலாளர் என்.சேகர், இளைஞர் பெருமன்ற நிர்வாகி பன்னீர்செல்வம், தேசிய மாதர் சம்மேளன மாவட்டச் செயலாளர் நதியா ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவாக உண்ணாவிரதத்தை முடித்து வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் உரையாற்றினார்.
காவல் துறை கெடுபிடி
கம்யூனிஸ்ட் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முறைப்படி அனுமதி பெற்றிருந்தும், மாநகராட்சி எதிரில் பந்தல் அமைத்தபோது காவல் துறையினர் வந்து அங்கே அமைக்கக் கூடாது, போக்குவரத்து நெருக்கடி ஏற்படும், எனவே சற்றுத் தூரம் தள்ளி பந்தல் அமைக்கும்படி கெடுபிடி செய்தனர். அவர்கள் சொன்ன இடத்தில் பந்தல் அமைத்து இருக்கைகள் போடப்பட்டன. ஆனால் அதன் முகப்புப் பகுதியில் தண்ணீர் தேங்கி, சேறாக இருந்தது. அதையும் செப்பனிட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. சிறிது நேரத்தில் கூட்டம் அதிகமாக வந்தால் முகப்புப் பகுதியிலேயே கூடுதல் சாமியானா பந்தல் அமைத்து விரிவுபடுத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த உதவி ஆணையர் முத்துசாமி, சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யக் கூடாது என்று சொல்லி கெடுபிடி செய்தார். ஏற்கனவே காவல் துறை அனுமதி மறுத்த இடத்தைச் சொல்லி அங்கே பந்தல் அமைக்க வேண்டியதுதானே என்றார். இதையடுத்து நிர்வாகிகள் காவல்துறையின் அணுகுமுறை சரியில்லை என்பதை சுட்டிக்காட்டி, முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதை ஆட்சேபித்தனர். மேலும் ஞாயிறன்று இந்து முன்னணி நடத்திய விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், கூட்டத்தில் காவல் துறையினர் எந்த கட்டுப்பாடும் விதிக்காமல், பல மணி நேரம் நகரின் போக்குவரத்து முடக்கப்பட்டபோதும் அமைதி காத்துவிட்டு, தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் போராட்டத்தின்போது கெடுபிடி செய்வது சரியல்ல என்றும் விமர்சித்தனர். இதையடுத்து காவல் துறையினர் அமைதியானார்கள். போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment