Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் அமைந்துள்ள நிப்ட் டீ பேஷன் பின்னலாடை கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் முதன்மை ஆலோசகரும், இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவருமான ராஜா சண்முகம் தலைமை தாங்கினார்.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாயி 130 மாணவ, மாணவிகளுக்கு இளநிலை பட்டமும், 35 மாணவ, மாணவிகளுக்கு முதுகலைப்பட்டமும் வழங்கினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:–
உலகில் ஆடை உற்பத்தி தொழில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் கடுமையான உழைப்பாளிகளாக விளங்குவதால் பின்னலாடை தொழில் துறையில் திருப்பூர் நகரம் தனித்தன்மை பெற்று விளங்குகிறது.
ஆடை வடிவமைப்பு துறையில் அதிக ஆர்வம் ஏற்பட்டு மாணவ, மாணவிகள் இதில் அதிகளவில் பட்டங்களை பெற்று வருகின்றனர்.
நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய பாணி ஆடைகளை வடிவமைப்பில் ஆர்வமும், விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. ஆனால் கலாசாரத்தையும், பண்பாட்டையும் மீறாத வகையில் ஆடைகளை வடிவமைப்பதில் கவனமாக இருக்கவேண்டும்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆடைகள் தயாரிக்கப்படவேண்டும். ஆடைகளே கலாசாரத்தின் எதிரொலி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆடை தயாரிப்பாளர்களுக்கும், வடிவமைப்பாளர்களுக்கும் அதிக பொறுப்புணர்வும், சமூக உணர்வும் வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

0 comments: