Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
வெள்ளகோவில், செப். 29–
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள வெள்ளப்பாறை என்ற இடத்தில் காசுவைத்து சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருப்பூர் மாவட்ட சப்–இன்ஸ்பெக்டராக (தனிப்பிரிவு) பணியாற்றிய பஞ்சலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு காசுவைத்து சூதாடிக் கொண்டிருந்த 54 பேரை கைது செய்தனர். ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு காங்கயம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசா ரணைக்கு ஆஜராகுமாறு பஞ்சலிங்கத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு சாட்சி பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி மோகனவள்ளி உத்தரவிட்டார். பஞ்சலிங்கம் தற்போது கோவை பி–1 காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

0 comments: