Friday, September 12, 2014

On Friday, September 12, 2014 by Unknown in ,    
பதிவு செய்த நேரம்:2014-09-12 12:53:07திருப்பூர், : திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இடைத்தேர்தல் தொடர் பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது
கூட்டத்தில் கலெக்டர் கோவிந்தராஜ் பேசியதாவது: வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் அல்லது 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணப்பட வேண்டும். இடைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள ஊ ரக மற்றும் நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகளிலுள்ள காலி பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்த தேவையான வாக்காளர் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரால் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாக்காளர் பட்டியல்கள் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமும் போதுமான எண்ணிக்கையில் இருப்பில் உள்ளது. இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பதவிகளுக்கான உள்ளாட்சி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்காளர் அடையாள சீட்டு சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தயார் செய்யப்பட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
உள்ளாட்சி தேர்தலுக்கான மாதிரி நன்னடத் தை விதிகள் கடந்த மாதம் 28ம் தேதி முதல் அமலுக்கு வந்து நடைமுறையில் உள்ளது. இம்மாதிரி நன்னடத்தை விதிகள் உள்ளாட்சி தேர்தல்கள் எந்தெந்தப் பகுதிகளில் நடக்கிறதோ அந்தப் பகுதிக்கு மட்டுமே பொருந்தும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றிற்கு உரிய அலுவலரிடம் முன்னதாகவே அனுமதி பெற வேண்டும். வாக்குப்பதிவு நாளன்றும், அதற்கு முந்தைய 24 மணி நேரத்திலும் மது அல்லது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை வழங்குவதோ அல்லது விநியோகிப்பதோ கூடாது.
வாக்கு சாவடியிலிருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் எந்த அரசியல் கட்சியும் தங்களது தேர்தல் முகாம்கள் எதையும் அமைக்கக் கூடாது. ஒரே கட்டிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கு சாவடிகள் இருந்தாலும், அவ்வாக்கு சாவடிகளுக்கு பொதுவாக, வேட்பாளரின் ஒரே ஒரு தேர்தல் முகாம் மட்டுமே அவ்வாக்குச் சாவடிகளிலிருந்து 200 மீட்டர் தூரத்திற்கு அப்பால் அமைக்கப்பட்டிருக்க வேண் டும். வாக்குச் சாவடிகளுக்கு அருகில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் அமைக்கின்ற முகாம்களுக்கு அருகே, தேவையில்லாமல் கும்பல் கூடுவதை தவிர்க்க வேண் டும். வேட்பாளர்களுடைய முகாம்கள் எளிய வகையில் அமைவதை உறுதி செய்யும் வகையில் அவர்கள், அங்கு சுவரொட்டிகள், கொடிகள் சின்னங்கள் அல்லது வேறு பிற பிரசார பொருட்கள் எவற்றையும் அதிகமாக காட்டி பெரிதுபடுத்த கூடா து. வாக்காளர்களுக்கு அர சியல் கட்சியினர் வழங்கும் அடையாளச் சீட்டுகள் வெற்று வெள்ளை தாள் களில் இருக்க வேண்டும். மேலும், அத்தாள்களில் சின்னமோ வேட்பாளரின் பெயரோ அல்லது கட்சியின் பெயரோ எதுவும் இருக்கக் கூடாது. வாக்காளரின் பெயர் அவரது தகப்பனார், கணவரின் பெயர், வார்டு எண், வாக்குச் சாவடியின் எண், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளரின் வரிசை எண் ஆகியவை மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
வாக்கு சாவடியிலிருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் தேர்தல் ஆதரவு கோருவது, தேர்தல் பிரசாரம் செய்வது ஆகியவை சட்டப்படியான குற்றங்களாகும். இக்குற்றத்தில் ஈடுபடும் நபரை பிடியாணையின்றி கைது செய்து தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரலாம். தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து உரிய அனுமதி சீட்டு பெறாமல் எந்த நபரும் வாக்குச் சாவடிக்குள் நுழைதல் கூடாது. வாக்கு சாவடியின் உள்ளேயோ அல்லது நுழைவு வாயி லிலோ, அருகாமையிலுள்ள பொது அல்லது தனியாரது இடங்களிலோ ஒலி பெருக்கியையோ, குரல் பெருக்கியையோ பயன்படுத்தகூடாது.  வாக்குச் சாவ டியின் தலைமை தேர்தல் அலுவலரின் சட்ட ரீதியான உத்தரவுக்கு கீழ்படிய மறுக் கும் நபர், காவலர் மூலமாக வெளியேற்றப்படுவார்கள். வாக்கு சாவடியிலிருந்து வாக்கு சீட்டை திருட்டுதனமாக எடுத்து செல்பவரோ அல்லது எடுத்துச் செல்ல முயற்சிப்பவரோ தண்டிக்கப்படுவார்கள். வாக்குப்பதிவு தினத்தன்று வாக்கு சாவடி முகவர்களுக்கான அனுமதி சீட்டுகள் சம்பந்தப்பட்ட வாக்கு சாவடி தலைமை அலுவலரால் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள பதட்டமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு அந்த வாக்குச் சாவடிகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல் துறையின் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் தேர்தல்கள் சுமு கமான முறையில் நடைபெற போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்கு எண்ணும் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு மூன்று பயிற்சி வகுப்புகள் நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல்களைப் பொறுத்த அளவில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் ஆகிய பதவியிடங்களுக்கான தேர்தல்கள் கட்சி சார்பின்றியும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கான தேர்தல்கள் கட்சி அடிப்படையிலும் நடத்தப்படுகிறது.
இதே போன்று நகர்ப்புற உள்ளாட்சி காலி பதவியிடங்களுக்கான தேர்தல்கள் கட்சி அடிப்படையில் நடத்தப்படுகிறது. நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தப்படவுள்ள தேர்தல்களுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சோதனை செய்யப்பட்டு பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தயார் நிலையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

0 comments: