Friday, September 12, 2014

On Friday, September 12, 2014 by Unknown in ,    
வதோதரா: குஜராத்தின் வதோதரா நகரின் அருகே உள்ள விஸ்வமித்ரி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், நகருக்குள் புகுந்த வெள்ளத்துடன் சேர்ந்து முதலை மற்றும் பாம்புகளும் ஊருக்குள் வந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர்கள் மேல் மாடிகளிலும், பிற பகுதிகளிலும் அடைக்கலம் அடைந்தனர். மக்களை காப்பாற்றும் பணியில் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

படகு மூலமாக மக்களை காப்பாற்றி கொண்டு சென்றபோது படகின் அருகில் முதலைகள் மற்றும் பாம்புகள் நீந்தி வருவதை அதிகாரிகள் பார்த்துள்ளனர். ஆனால் அதை பற்றி மக்களிடம் கூறினால், பயத்தில் படகை சாய்த்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் அதனை கூறாமல் மறைத்துள்ளனர். மேலும், சுமார் 204 முதலைகள் வசித்து வருகின்றன என தகவல் தெரிவித்தனர். இதனிடையே சிறிய குட்டைபோன்ற நீர் இருந்தாலும், முதலைகள் இருக்குமோ என்ற அச்சத்தில் வதோதரா மக்கள் வாழ்ந்து வருகின்றனர். முதலைகள் மற்றும் பாம்புகள் கண்டுபிடிக்கும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்

0 comments: