Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
ருப்பூரில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஸ்ரீபுரம் அறக்கட்டளை, மாநகர காவல்துறையுடன் இணைந்து மாநகர வீதிகளில் 52 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை மேற்கொண்டுள்ளது.
திருப்பூரில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநகர காவல்துறையும், ஸ்ரீபுரம் அறக்கட்டளையும் இணைந்து மாநகர வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, திருப்பூர் மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் இத்திட்டத்தில் முதல் கட்டமாக மாநகரின் மைய பகுதியில் உள்ள ஷெரீப் காலனி பகுதியில் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கப்பட்டது. 
இதற்காக, சீனாவில் இருந்து 52 கண்காணிப்பு கேமராக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில், பல்லடம் சாலை டி.கே.டி. பகுதி சிக்னல், கல்யாணி பெட்ரோல் பங்க் பகுதி, உஷா திரையங்கு அருகில், அரண்மனைப்புதூர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட சுற்றுப்பகுதி வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 13 கேமராக்கள் நகரின் முக்கிய வீதிகளிலும், போக்குவரத்து சிக்னல் பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ளன.

0 comments: