Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
காங்கயம் பகுதியில் தொடரும் ஆடு திருட்டால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதையடுத்து, காங்கயம் போலீசார் ஆடு திருடப்படுவது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பாப்பிணி அடுத்துள்ள அழகேகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சிதம்பரம் (55). இவர், தனது தோட்டத்தில் 48 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து, தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் காலை யில் தோட்டத்திற்கு வந்த சிதம்பரம் பட்டியில் இருந்த ஆடுகள் அனைத்தும் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். திருடு போன ஆடுகளின் மதிப்பு ரூ.3 லட்சமாகும். 
பின்னர் இதுகுறித்து காங்கயம் போலீசில் புகார் அளித்தார். இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கயம் நட்டார்பாளையத்தில் உள்ள பெரியசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த 20 ஆடுகள் திருடு போனது. அதே போல், செலாம்பாளையம் சிவசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த 40 ஆடுகளும், குட்டவலசு துரைசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த 21 ஆடுகளும் திருடு போனது. தொடர்ச்சியாக ஆடுகள் இப்பகுதியில் திருடு போவது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘காங் கயம், வெள்ளகோவில் பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். இங்கு பெரியளவில் விவசாயம் நடைபெறு வதில்லை. இங்கு உள்ள விவசாயிகளுக்கு வருமானம் என்றால் அது ஆடு வளர்ப்பு தான். இதனால் இங்குள்ள அனைத்து தோட்டத்திலும் விவசாயிகள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். ஆடுகளை இரவு நேரத்தில் பட்டியில் அடைத்து வைத்து விட்டு, காலையில் வந்து மேய்ச்சலுக்கு விடுவோம். ஆனால், சமீபகாலமாக ஆடுகளை பட் டியில் அடைத்து வைத்து விட்டு காலையில் வந்து பார்த்தால் ஆடுகள் பட்டியில் இருப்பதில்லை. திருடு போய் விடுகிறது. இதனால் எங்களுக்கு ஆயிரக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. ஆடுகளை வளர்த்து தான் நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்நிலையில், ஆடுகள் திருடு போவது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும், இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு வரு கிறோம். எனவே போலீசார், ஆடு திருடும் கும்பலை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுதொடர்பாக காங்கயம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments: