Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
உடுமலை, : பிஏபி கால்வாய் முழுவதிலும் புதர்கள் மண்டி கிடப்பதால் கடைமடை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேர்வதில் சிரமம் ஏற்ப டும் சூழ்நிலை உருவாகியுள் ளது. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள், கால்வாயை உடனே தூர்வார வேண்டுமென அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3.75 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி அடிப்படையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது 2ம் மண்டல பாசனம் நடைபெற உள்ளது. இதற்கு கடந்த மாதமே தண்ணீர் திறக்க வேண்டும். ஆ ணனால், பருவமழை பொய்த்து  பிஏபி அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததாலும், கான் டூர் கால்வாயில் பராமரிப்பு பணிகள் நடந்ததா லும் குறித்த காலத்தில் தண்ணீர் திறப்பு நடக்கவில்லை. தற்போது பருவ மழை பொழிந்து அணைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. கான்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகளும் நிறைவடைந்து, பரம்பிக்குளம் அணையில் இருந்து கான்டூர் கால் வாயில் கடந்த 20ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் சர்க்கார்பதி மின் நிலையம் வந்து அங்கு மின் உற்பத்தியாகி கான்டூர் கால்வாயில் திருப்பி விடப்பட்டது. திறக்கப்பட்ட அன்று இரவே தண்ணீர் திருமூர்த்தி அணை வந்தடைந்தது. அப்போது 15 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட் டம் 45 அடியாக உயர்ந்தது. 
இந்நிலையில், பிஏபி கால்வாய் நெடுகிலும் புதர் கள் மண்டி கிடப்பதால் கடைமடை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேர்வதில் சிரமம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் கவலையடைந்த விவசாயிகள், கால்வாயை உடனே தூர்வார வேண்டு மென அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.

0 comments: