Wednesday, September 17, 2014
அரவக்குறிச்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜெயந்தி நேரில் ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்ட பணிகள்
கரூர் மாவட்டம் அரவக் குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடக்கிறது. அதன்படி நாகம்பள்ளி ஊராட்சி மலைக்கோவிலூரில் பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயந்தி பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அதே போன்று நவமணி நகர் பகுதியில் தனி நபர் கழிப்பறை அமைக்கும் திட்டத்தை பார்வையிட்டார். அப் போது அங்கிருந்த பொது மக்களிடம் கழிப்பறையை அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
கண்காணிக்க வேண்டும்
அதே போன்று தங்கள் குழந்தைகளையும் கழிப் பறையை பயன்படுத்தும் பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து மலைக் கோவிலூரில் உள்ள அங்கன் வாடி மையத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு கலவை சாதம் வழங்குவதை பார்வையிட்டார். அப் போது குழந்தைகளின் எடையை பராமரிக்கும் பதிவேடுகளை ஆய்வு செய்து, சரியான எடை யில் குழந்தைகள் இருக்கும் அளவிற்கு இணை உணவுகள் வழங்கி குழந்தைகளை நல்ல முறையில் கண்காணிக்க வேண் டும் என்று அங்கன்வாடி பணியாளர்களுக்கு உத்தர விட்டார்.
ஆய்வு
அதே போன்று மலைக்கோவிலூரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது எடை அளவு, இருப்பு சரியாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்தார். தொடர்ந்து தடா கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று அங்கு படித்து வரும் மாணவ–மாணவிகளின் கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள மாணவ– மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகளை ஆய்வு செய் தார்.இதே போன்று கொடை யூர் ஊராட்சி கரப்பாளை யம் கிராமத்தில் ஊரக உட்கட்டமைப்பு திட்டத் தில் ரூ.6 லட்சத்து 20 ஆயிரத்தில் கட்டப்ப ட்டு வரும் தடுப் பணை யை பார்வை யிட்டார்.
அப்போது அந்த பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் கிடைக்க அந்த பகுதியில் உள்ள ஆழ் குழாய் கிணறுகளை சீரமைக்க கோரி வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் நுகர்வு பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அதிகாரி லியாகத், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி செந்தமிழ்செல்வி, அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தண்ட பாணி, தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
 

0 comments:
Post a Comment