Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
ஓணம் பண்டிகையை வரவேற்கும் வகையில் கூடலூர் பகுதியில் அத்தப்பூ கோலப் போட்டி நடைபெற்றது. மேலும் விளையாட்டு போட்டிகளும் நடத்தப் பட்டன.
அத்தப்பூ கோலப்போட்டி
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வருகின்ற 6-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஓணம் பண்டிகைகளை கட்ட தொடங்கி உள்ளது.
ஓணம் பண்டிகையை வரவேற்கும் வகையில்கூடலூர் விமலகிரி கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் சிரேயஸ் அமைப்பு சார்பில் அத்தப்பூ கோலப்போட்டிகள் நடை பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கண்ணை கவரும் வகையில் அத்தப்பூ கோலம் போட் டனர்.
மேலும் ஆண்கள், பெண் களுக்கு இடையே தனித்தனியா கயிறு இழுப்பது உள்பட பல்வேறு போட்டிகள் நடை பெற்றது. இந்த போட்டி களுக்கு பங்கு குரு ஹெல்டோ காரிக்கொம்பில் தலைமை தாங்கினார். முடிவில் போட் டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் ஓணம் விருந்து பரிமாறப்பட் டது.

மேலும் பெரும்பாலான வீடுகள் முன்பாக அத்தப்பூ கோலங்கள் போடப்பட்டு வருகிறது. இதனால் கூடலூர், பந்தலூர் பகுதி மக்கள் ஓணம் பண்டிகையை வரவேற்க தொடங்கி உள்ளனர்.

0 comments: