Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
சென்னை தண்டையார்பேட்டை ரெயில்வே யார்டில் மின்வயரில் சிக்கிய காற்றாடியை எடுக்க சென்றபோது மின்சாரம் தாக்கி 10–ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருடைய மகன் ரமேஷ் (வயது 15). இவன், அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 1–ந் தேதி தண்டையார்பேட்டை வ.உ.சி. நகர் ரெயில்வே யார்டில் உள்ள மின்சார கம்பியில் சிக்கிய காற்றாடியை எடுக்க அங்கிருந்த ரெயில்வே பணி வண்டியில் ரமேஷ் ஏறினான். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின்வயரில் அவனது உடல் உரசியது.
இதில் அவன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். படுகாயம் அடைந்த அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு ரமேஷ் பரிதாபமாக இறந்தான். இதுபற்றி வ.உ.சி. நகர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 comments: