Friday, October 24, 2014

தமிழகத்திலேயே முதல் முறையாக திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த 2 ஆண்டுகளாக நூலக வாசகர் வட்டம் சார்பில் தேசிய தகுதித் தேர்வு (நெட்), மாநில தகுதித் தேர்வு (செட்), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் (டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 3, 4) உள்ளிட்டவற்றுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
போட்டித் தேர்வுகள் மூலமாக தேர்வு பெற்று, அரசு வேலையை பெற வேண்டும் என்பதே பலரது கனவாக உள்ளது. இந்நிலையில், உடுமலையில் தன்னார்வலர்களால் செயல் படுத்தப்படும் போட்டித் தேர்வு மையத்தில் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களும், பெண்களும்தான் அதிகம். உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பொள்ளாச்சி பகுதிக ளுக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் இருந்து 170 பேர் பயிற்சி பெறுகின்றனர். இதில் 120 பேர் பெண்கள்.
இதுதொடர்பாக நூலக வாசகர் வட்டத் தலைவரும், பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப் பாளருமான லெனின்பாரதி கூறியது:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலமாக, கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பயிற்சி மையம், தவிர்க்க முடியாத காரணங்களால் கைவிடப்பட்டது. அப்போது கிடைத்த அனுபவங்கள் மூலமாக, உடுமலை நூலகத்திலேயே கடந்த ஆண்டு முதல் இப்பயிற்சியை நடத்த தீர்மானிக்கப்பட்டது. பாடங்கள் நடத்துவதற்காக நூலகர் பீர்பாஷா, பேராசிரியர்கள் கிருஷ்ணன், குணசேகரன், சுப்பிரமணியம், திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் ராகவன் ஆகியோரை கொண்ட தனி குழுவும் அமைக்கப்பட்டது.
நூலகத்துக்கு வரும் வாசகர்கள் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்கள், செய்தித்தாள்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள் வாயிலாகவும் பயிற்சி மையம் செயல்படுவதை தெரியப்படுத்தினோம். ஆரம்பத்தில் 40 பேர் பயிற்சிக்கு வந்தனர். தற்போது 170 பேர் படிக்கின்றனர். பயிற்சிக்கான புத்தகங்கள், கையேடுகளை தயாரிக்க தனி குழு உள்ளது. இந்தக் குழுவினர், சென்னையில் உள்ள மனிதநேய அறக்கட்டளை, ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிகரமாக செயல்படும் மையங்களுக்கு சென்று, பயிற்றுவிக்கும் முறைகளை கற்றுக்கொள்வதுடன், வினா தாள் ஆகியவற்றையும் பெற்று இங்குள்ள மாணவர்களுக்கு அளிக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை முதல் மாலை வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. இப்பயிற்சி வகுப்பில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். பயிற்சிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், போதிய இருக்கைகள் இல்லாததாலும் பலர் தரையில் அமர்ந்து வகுப்புகளை கவனிக்கின்றனர். இந்த மையத்தில் பயிற்சி பெற்ற நான்கு பேர் இளநிலை உதவியாளர், கிளார்க் உள்ளிட்ட அரசுப் பணிகளில் உள்ளனர். தமிழகத்திலேயே நூலக வாசகர் வட்டம் சார்பில் நடத்தப்படும் முதல் பயிற்சி மையம் இதுதான் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தேனி மாவட்டத்தில், குடிநீர் அபிவிருத்தி திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். கலெக...
-
ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி மக்களை தேடி சென்று சேவை செய்யும் அரசாக அண்ணா திமுக அரசு திகழ்கிறது என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார். ...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
-
திருப்பூர், செவந்தம்பாளையம் தடுப்பணையில் கட்டடக் கழிவை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்...
-
வியாசர்பாடி மேம்பால பணிகள், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அக்டோபர் மாதத்திற்குள் முடிய வாய்ப்பில்லை என தெரிகிறது. வியாசர்பாடியில் பழமைவாய்ந்த...
0 comments:
Post a Comment