Sunday, October 05, 2014

On Sunday, October 05, 2014 by Unknown in ,    
கரூர் :கரூர் மாவட்டம், புலியூர் டவுன் பஞ்சாயத்தில் முழு சுகாதார, தமிழகம் நமது நகரம், என்ற திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணியை கலெக்டர் ஜெயந்தி ஆய்வுசெய்தனர்.கலெக்டர் ஜெயந்தி, கூறியதாவது:
முழு சுகாதார, தமிழகம் நமது நகரம், என்ற திட்டத்தின் கீழ் அனைத்து டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மாவட்டத்தின் இரண்டு நகராட்சி மற்றும், 11 டவுன் பஞ்சாயத்துகளில் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. நகர்ப்பகுதிகள் முழு சுகாதாரமாக இருப்பதே, இதன் நோக்கமாகும்.இத்திட்டத்தின் மூலம் திறந்தவெளி மலம் கழிப்பதை தவிர்த்து, கழிப்பறைகளை பயன்படுத்துவதை, பொதுமக்களிடையே கட்டாயப்படுத்துதல் மற்றும் சுற்றுசூழல் கெடாமல் இருக்க, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தினசரி நகர்ப்பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் மூலம் தூய்மையான காற்றை சுவாசிப்பதுடன், பொதுமக்களுக்கு நோய் தாக்குதலின்றி சுகாதார முறையில் வாழ முடியும். பொதுமக்கள் அரசின் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று அவர் கூறினார்.நிகழ்ச்சியில், டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் ராஜேந்திரன், கரூர் தாசில்தார் மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: