Wednesday, October 15, 2014

On Wednesday, October 15, 2014 by Unknown in ,    
பொடா வழக்கில் விடுதலை இந்திய வரலாற்றில் முக்கிய தீர்ப்பு: வைகோ பேட்டி
மதுரை அருகே திருமங்கலத்தில் கடந்த 2002–ம் ஆண்டு ம.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ, ஈரோடு கணேசமூர்த்தி, புலவர் செவந்தியப்பன் உள்பட 9 பேர் விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதாக அவர்கள் மீது கியூ பிரிவு போலீசார் பொடா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. பல கட்ட விசாரணைக்கு பின் நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விசாரித்து பொடா வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கடந்த 2002–ம் ஆண்டு திருமங்கலம் பொதுக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் விடுதலை புலிகளை பற்றி பேசியதை தான் இங்கும் பேசினேன். இதனால் எங்கள் மீது அப்போதைய அ.தி.மு.க. அரசு பொடா வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து நான் திரும்பியபோது என்னை கைது செய்தனர். அதை நாங்கள் சட்ட ரீதியாக சந்தித்தோம். பொடா கோர்ட்டில் நானே வாதாடினேன். இதை தொடர்ந்து நீதிபதி சகாரியா தலைமையில் மறு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அவர் ஆய்வு செய்து வைகோ மற்றும் அவரது சகாக்கள் மீது பொடா வழக்கு போட எந்த முகாந்திரமும் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு இந்திய வரலாற்றில் முக்கியமானதாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: