Wednesday, October 15, 2014

On Wednesday, October 15, 2014 by Unknown in ,    
மதுரை வங்கிகளில் கள்ள நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் புகார்மதுரையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு பணம் அனுப்பப்படுகின்றது. இதில் பலமுறை கள்ள நோட்டுகள் வருவதாக ரிசர்வ் வங்கி புகார் கூறி வருகிறது.
இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் 50–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.
இதனால் மதுரையில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் 2 வாலிபர்கள் ஒரு கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்று கைதானார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளனவா? என தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
இந்த நிலையில் மதுரை வங்கியில் இருந்து சமீபத்தில் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட பணத்தில் 3 ஐந்நூறு ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்ததாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரி மதுரை குற்றப்பிரிவு போலீசில் மீண்டும் புகார் செய்தார். தொடர்ந்து மதுரை வங்கிகளில் இருந்து கள்ள ரூபாய் நோட்டுகள் வருவதால் இவை எங்கிருந்து வருகின்றன. எவ்வளவு நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளன என்பது ‘மர்ம’மாக உள்ளது.
இதை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: