Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    
கிரானைட் முறைகேடுகள் குறித்து மதுரையில் சகாயம் குழு 10–ந்தேதி விசாரணை தொடக்கம்மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் வெட்டப்பட்டதில் ஏற்பட்ட பல கோடி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
சகாயம் குழுவினரின் விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டு தமிழக அரசு விசாரணைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
சகாயம் குழுவில் 2 துணை கலெக்டர்கள் மற்றும் தாசில்தார்கள், புவியாளர்கள் உள்ளிட்ட 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான முகாம் அலுவலகம் மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை வணிக வளாக கட்டிடத்தின் முதல் தளத்தில் தயாராகி வருகிறது.
சகாயம் குழுவினர் விசாரணை நடத்த வசதியாக 5 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முகாம் அலுவலகத்தின் மராமத்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் கிரானைட் முறைகேடு விசாரணை வருகிற 10–ந்தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளே சகாயம் தனது குழு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு மேலூர் பகுதிக்கு சென்று விசாரணையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே மதுரை வரும் சகாயத்தை வரவேற்கும் வகையில் சில ஆட்டோக்களின் பின்புறம் சகாயத்தை பாராட்டியும், வாழ்த்தியும் பிளக்ஸ் பேனர்கள் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments: