Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    
ஒத்தக்கடையில் வீடு புகுந்து நகை– பணம் திருட்டு
ஒத்தக்கடை அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் கஸ்தூரி. இவர் கதவை திறந்து வைத்துவிட்டு அந்த பகுதியில் உள்ள பால்வாடிக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அதிலிருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.17 ஆயிரம் கொள்ளை போயிருந்தது.
இது குறித்து ஒத்தக்கடை போலீசில் கஸ்தூரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி அம்சவள்ளி (38). இவர்கள் மராட்டிய மாநிலத்தில் முறுக்கு வியாபாரம் செய்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் ஊருக்கு வந்திருந்த அவர்கள் வீட்டின் பீரோவில் 14 பவுன் நகையை வைத்துவிட்டு மராட்டியம் சென்று விட்டார்களாம். தற்போது திரும்பி வந்து பார்த்தபோது அந்த நகை மாயமாகி இருந்தது.
இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

0 comments: