Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    
திருமங்கலம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி: செல்லூர் ராஜூ வழங்கினார்திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ள காரைக்கேணி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, இவர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதில் அதிர்ச்சி அடைந்தது மரணம் அடைந்தார்.
ராமசாமி குடும்பத்துக்கு அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ, முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., மேயர் ராஜன்செல்லப்பா உள்பட மாநிலை மாவட்ட கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினர்.
இதில் சிறுபான்மை பிரிவு ஜான்மகேந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம், யூனியன் சேர்மன்கள் திருச்செல்வம், தமிழழகன், மகாலிங்கம், நகர செயலாளர்கள் விஜயன், நாகராஜன், நெடுமாறன், துணை சேர்மன்கள் பாவடியான், சதீஷ் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் பிரபுசங்கர், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

0 comments: