Saturday, November 29, 2014

On Saturday, November 29, 2014 by farook press in ,    
ஆதார் அட்டைக்கு தாலுகா அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பதிவு முகாம் வருகிற 1–ந் தேதி(திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளது. 
ஆதார்’ எனும் தேசிய அடையாள அட்டை தயாரிப்பதற்காக, கைரேகை, கண் விழி மற்றும் புகைப்படம் எடுக்கும் ‘பயோமெட்ரிக்’ முகாம், நாடு முழுவதும் நடந்தது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் 15 லட்சத்து 42 ஆயிரம் பேரின் உடற்கூறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுபட்டோருக்கான முகாம் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முகாம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின், ஆதார் அட்டை திட்டம் தொடருமா? விடுபட்டோருக்கு வழங்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவியது. அரசு திட்டங்களில் மானியம் பெற, வங்கி கணக்கு அவசியம் என்பதால், ஆதார் அட்டை வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது. விடுபட்டோருக்கு ஆதார் அட்டை வழங்க ஏதுவாக, தாலுகா அலுவலகங்களில், நிரந்தர மையம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் அட்டைக்கான நிரந்தர பதிவு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் வருகிற 1–ந் தேதி (திங்கட்கிழமை) முதல் செயல்பட உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
ஆதார் அட்டைக்கான உடற்கூறு பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள், அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு சென்று, நிரந்தர பதிவு முகாமில் விண்ணப்பிக்கலாம். தாசில்தார்களின் சான்றொப்பம் பெற்றதும், உடனடியாக உடற்கூறுகளை பதிவு செய்யலாம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments: