Saturday, November 29, 2014

On Saturday, November 29, 2014 by farook press in ,    
உடுமலை நகராட்சியில் தூய்மை பாரதம் திட்டத்தின்படி நகராட்சி பகுதியில் கூட்டு துப்புரவு பணிகள், சுகாதார விழிப்புணர்வு பேரணிகள், மாணவ–மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள், சுகாதார கழிப்பிடங்களில் உள்ள பழுதுகளை சரிசெய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக குழாய்கள், கழிப்பிடங்களில் ஏற்படும் பழுதுகள், கசிவுகள், ஆகியவற்றை கண்டறிந்து பழுது பார்த்தல், மின்சார இணைப்புகளில் ஏற்படும் பழுதுகளை சரி செய்தல் குறித்து நகராட்சி பகுதிகளில் பணிபுரியும் குழாய் பொருத்துனர்கள், மின் பணியாளர்கள் ஆகியோருக்கான விழிப்புணர்வு பயிற்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொறியாளர் வெ.கண்ணையா முன்னிலை வகித்தார். அப்போது நகராட்சி கழிப்பிடங்களில் பழுது மற்றும் மின்சார பழுது ஆகியவற்றை உடனே சரி செய்யவும், தனியார் குழாய் பொருத்துனர்கள் மற்றும் மின் பணியாளர்கள் தரமான சாதனைங்களை உபயோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

0 comments: