Saturday, November 01, 2014
நபார்டு வங்கியின் கடன் இலக்கு... ரூ.2,745 கோடி = கரூர் மாவட்ட கலெக்டர் தகவல் கரூர்: ""கரூர் மாவட்டத்துக்கு, நபார்டு வங்கி மூலம், 2015-16ம் ஆண்டுக்கான கடன் இலக்கு, 2,745 கோடி ரூபாய்,'' என்று கரூர் கலெக்டர் ஜெயந்தி தெரிவித்தார்.நபார்டு வங்கியின் மூலம் வளம் சார்ந்த கடன் திட்டம், 2015-16ம் ஆண்டுக்கான ஆண்டு திட்ட அறிக்கை வெளியீட்டு கூட்டம், கரூர் கலெக்டர் ஜெயந்தி தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.கரூர் மாவட்ட நபார்டு வங்கி பொது மேலாளர் பார்த்திபன் வரவேற்றார்.திட்ட அறிக்கையை வெளியிட்டு, கரூர் கலெக்டர் ஜெயந்தி பேசியதாவது:கரூர் மாவட்டத்தில், இந்தாண்டு பருவமழை பெய்துள்ளதால், விவசாயம் மற்றும் அதன் சார்ந்த வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். நபார்டு திட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பது போல், விவசாயிகளுக்கு தேவையான காலகட்டத்தில் ஆலோசனையுடன் நிதிஉதவி வழங்க வேண்டும். மிகவும் பின் தங்கியவர்களுக்கு, தனிநபர் கடன் அதிகளவில் வழங்க வேண்டும்.கரூர் மாவட்டத்துக்கான, 2015-16ம் ஆண்டு நபார்டு வங்கியின் திட்ட அறிக்கையில், 2,745 கோடி முன்னுரிமை கடன்களுக்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலப்பயிர் கடனாக, 928 கோடியும், நீர் வளமேம்பாடு, விவசாய கருவிகள், கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை பயிர் வளர்ப்பு, சூரிய மின்சக்தி உற்பத்தி, விவசாய கிடங்குகள் போன்றவைகளுக்கு நீண்டகால கடனாக, 460 கோடியும், பண்ணைசாரா பணிகளுக்காக, 906 கோடியும், இதர முன்னுரிமை கடன்களுக்காக, 451 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில், 1,300 கூட்டு பொறுப்புக் குழுக்கள் மூலமாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் நடத்த சிறு, குறு விவசாயிகளுக்கு தேவையான கடன்கள் அளிக்க வங்கிகள் முன்வர வேண்டும். உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றிய கருத்துக்களும் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீர்வள மேம்பாட்டுக்காக காவிரி ஆற்று வாய்க்கால்களை செப்பனிடுதல், அவைகளின் குறுக்கே வரும் சிறு நடை பாலங்கள், மதகுகள், ஷட்டர்ஸ் ஆகியவைகளை சீரமைத்தல் அமராவதி, நங்காஞ்சியாறு மற்றும் குடகனாறுகளில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டுதல், ஏரிகள் சீரமைத்தல், நிலத்தடி நீரை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.கால்நடை வளர்ச்சிக்கு தேவையான கால்நடை மருத்துவமனைகள், ஆடு மற்றும் மாடுகள் விற்பனை செய்யப்படும் சந்தைகளுக்கான மேம்பாடு மற்றும் நெல், முருங்கை, வாழை விவசாயிகளுக்கு வேண்டிய ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்கு மேம்பாடு வசதிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாயனூரில் இருந்து, குளித்தலை வரை காவிரி ஆற்று வாய்க்கால்களின் குறுக்கே இருக்கும் பாலங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையும் நபார்டு வங்கி மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால், பல கிராம விவசாயிகளின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருக்கும்.
இவ்வாறு கலெக்டர் ஜெயந்தி பேசினார்.நிகழ்ச்சியில், ஐ.ஓ.பி., முதுநிலை மண்டல மேலாளர் நரசிம்மன், கனரா வங்கி மண்டல மேலாளர் மணிவண்ணன், முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், கனரா வங்கி கிளை மேலாளர் பாபு, மகளிர் திட்ட இணை இயக்குனர் முகம்மது சகாபுதீன், புதுவாழ்வு திட்ட மேலாளர் ரூபவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இயற்கை என்றால் நம் நினைவுக்கு வருவது எல்லாம் பசுமையான மரங்கள், வயல்வெளிகள், நீளமான வானமும் தான். ஆனால் இயற்கையின் மற்றொரு உருவான மலைகளும...
-
க.பரமத்தி அருகே விசுவநாதபுரி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்83 மனுக்கள் பெறப்பட்டது க.பரமத்த...
-
சென்னை: தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில், 10 முதல், 15 சதவீத கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் மத்திய மற்றும் மாந...
-
திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம் திருச்சிராப்பள்ளி வனச்சரகம் கண்ணனூர் பிரிவுக்கு உட்பட்ட வீரமச்சான்பட்டி காப்புகாட்டில் - துறையூர் கண்...
-
திருப்பூர் அருகே, செட்டிபாளையம் பகுதியில் வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்கியதில் திமுக பிரமுகர், அவரது மனைவி, மகன் கொலை செய்யப்ப...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சி கழக அமைப்புச் செயலாளரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட, சோமரசம்பேட்டை முஹம்மத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment