Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

கல்லூரி மாணவர்கள் 2 பேர் காவிரியில் மூழ்கினர்                                                                                  கரூர் அருகேயுள்ள மாயனூர் காவிரி கதவணையில் குளித்த கல்லூரி மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் புலியூர் செல்வநகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கார்த்திக் (20). இவர் கரூர் தனியார் கல்லூரியில் 2 ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கோகுல் பிரசாத் (21) இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நண்பரான கார்த்திக் (21)  ஆகியோர் நேற்று மதியம் 3 மணியளவில் பைக்கில் மாயனூர் கதவணைக்கு குளிக்க சென்றனர். ஆபத் தான பகுதி என்பதால் அங் கு குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது மறுகரையில் உள்ள 3 ஷட்டர்களில் மட்டும் தண்ணீர் வெ ளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதிக்கு 3 பேரும் சென்றனர். கரையில் பைக்கை நிறுத்தி விட்டு கார்த்திக்கும், கோகுல்பிரசாத்தும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதைக்கண்ட கரையில் இருந்த கார்த்திக் அவர்களை காப்பாற்ற உதவி கேட்டு சத்தம் போட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து கரூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து ஆற்றில் இறங்கி மாணவர்களை தேடினர். இரவு வரை மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

0 comments: