Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

பயன்பாடின்றி கிடக்கும் பழைய எஸ்பி அலுவலக கட்டிடத்திற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மாற்றப்படுமா?                                                                            பயன்பாடின்றி கிடக்கும் பழைய எஸ்பி அலுவலக கட்டடத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் அமைக்கப்படு மா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் மாவட்டம் கடந்த 1995ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கடந்த 1998ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் திருச்சி மாவட்டத்தின் துணை அலுவலகமாக செயல்பட்டது. கரூர் போலீஸ் லைன் பகுதியில் செயல்பட்டுவந்த மாவட்ட அலுவலகம் அதன்பின்னர் கரூர் காமராஜ் ரோட்டில் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இடவசதி போதுமானதாக இல்லை. இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியாமல் அலுவலகத்திற்கு வருபவர்கள் அவதிப்படுகின்றனர். மேலும் அலுவலகத்திலும் கணினி போன்ற உபகரணங்களை வைத்தும் அலுவலர்கள் அமர்ந்தும் பணியாற்ற இயலாத அளவுக்கு இடப்பற்றாக்குறை  உள்ளது.

 கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து  வேலைவாய்ப்பிற்காக ஒரு லட்சத்து 50ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் பதிவை புதுப்பிப்பதற்காகவும், கூடுதல் கல்வித்தகுதியை பதிவு செய்வதற்காகவும் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் இங்கு வேலை வாய்ப்பு நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளுக்கும், உதவித் தொகை பெறுவதற்காகவும்  விண்ணப்பம் அளிக்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
 கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு புதிய சொந்த கட்டடம் கட்டுவதற்கு இடம் சரியான இடம் கிடைக்கவில்லை. தற்போது அதிகாரிகள் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரூ.1.50 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்தும் இடம் கிடைக்காததால் புதிய அலுவலகம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

 இதுகுறித்து அதிகாரிகள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் பஸ் நிலையம், ரயில் நிலையத்தில் இருந்து மக்கள் எளிதில் வந்து செல்லக்கூடிய இடத்தில் அமைய வேண்டும். ஒருசில இடங்கள் பார்க்கப்பட்டது,. அந்த இடங்கள் ஊருக்கு வெளிப்புறத்தில் இருக்கிறது. வேலை தேடிவருவோர் எளிதில் வரும் வகையில் அந்த இடங்கள் அமையவில்லை. விரைவில் இடம் தேர்வு செய்யப்படும் என அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 கரூர் அரசு கல்லூரி அருகே கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் முன்பு எஸ்பி அலுவலகம் செயல்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு முதல் கலெக்டர் அலுவலகம் அருகே புதிய கட்டடத்தில் மாவட்ட காவல் அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு இடம் தேடிவரும் நிலையில் இந்த இடத்தை பயன்படுத்திக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயன்பாடற்று கிடக்கும் இந்த இடம் அரசு கலைக் கல்லூரிக்கு சொந்தமான இடம். இந்த இடத்தில் புதிய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அமைத்தால் கலெ க்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு செ ல்லும் சாலை என்பதால் போக்குவரத்துக்கு எளிதாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.      

0 comments: