Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by farook press in ,    
திருப்பூர் குமரானந்தபுரம் ஜே.ஜி.நகர் முதல் வீதியை சேர்ந்தவர் மதுசூதனன்(வயது 36). பங்குச்சந்தை புரோக்கரான இவர், சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்ற மதுசூதனன் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.
இதுபற்றி அவர் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (குற்றப்பிரிவு) சேகர்சிங் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

0 comments: