Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by farook press in ,    
தாராபுரம் மீனாட்சிபுரத்தில் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதசுவாமி கோவில் உள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தகோவிலில் பவுர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்று பிரதோஷம் என்பதால் ஸ்ரீமீனாட்சி சொக்கநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முதலில் சொக்கநாதசுவாமிக்கு எதிரே அமர்ந்துள்ள நந்திக்கு 16 வகையான அபிஷேகமும், அதை தொடர்ந்து சொக்கநாதசுவாமிக்கும் 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பல்வேறு வகையான தீபாராதனைகள் காட்டப்பட்டன. ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக உற்சவ மூர்த்திகளான சொக்கநாதரும், மீனாட்சி அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை 3 முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது திரளான பக்தர்கள் சாமிதரினம் செய்தனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

0 comments: