Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by farook press in ,    
உடுமலையை அடுத்த ஜல்லிபட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அருளானந்தம் தலைமை தாங்கினார். முரளி என்ற கோபால கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். யு.கே.பி.முத்துகுமாரசாமி, யு.கே.பி.எம்.கார்த்திக், கே.என்.ஜி.வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் பாம்பாற்றின் குறுக்கே அணைகட்டுவதை கண்டித்து போராட்டம் நடத்துவது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் நாகமாணிக்கம், முருகன், செல்வம், சுந்தரராஜன், ரத்தினவேல், பாலு, மயில்சாமி, தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: